சிவகங்கை மாவட்டம், கீழடி அருகேயுள்ள சொட்டதட்டி கிராமத்தைச் சேர்ந்த 29 வயதுடைய யோகராஜன் (எ) கருவாயன் என்பவர் மீது திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால், கடந்த ஆண்டு இவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த காலத்தில், தன்னை ஜாமீனில் எடுக்க மனைவி பாண்டிச்செல்வி (25) எந்த முயற்சியும் செய்யவில்லை என்றும், தனது பெற்றோரே அதற்காக உழைத்தனர் என்றும் யோகராஜன் மனக்கசப்பில் இருந்துள்ளார்.
ஒரு ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு வெளியே வந்த யோகராஜன், தனது வீட்டிற்குச் சென்று மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று காலை முதல் நீடித்த இந்தத் தகராறு மாலை 5 மணியளவில் தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த யோகராஜன் வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி பாண்டிச்செல்வியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பெற்ற தாயைக் தந்தை கொடூரமாக வெட்டியதைக்கண்டு இவர்களின் இரு குழந்தைகளான யோகமித்ரன் (6) மற்றும் தீனா (3) அலறித் துடித்துள்ளனர்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் யோகராஜன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தகவலறிந்து வந்த கீழடி காவல்துறையினர் பாண்டிச்செல்வியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மானாமதுரை துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கீழடி காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய நிலையில், தப்பியோடிய யோகராஜனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சிறையிலிருந்து வந்த மறுநாளே நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…