“சார்.. நான் என் புருஷன கொன்னுட்டேன்”…. ரத்த வெள்ளத்தில் மிதந்த கணவன்… காவல் நிலையம் சென்ற மனைவி கொடுத்த பகீர் வாக்குமூலம்…!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள இளையநகரம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் குமார். விவசாயத் தொழில் செய்து வந்த இவருக்கு, ரம்யா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். திருமணமாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், குமாருக்கு இருந்து வந்த கடுமையான மதுப்பழக்கம் அந்த குடும்பத்தின் மகிழ்ச்சியைப் பறிப்பதாக அமைந்தது. தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் குமார், மனைவி ரம்யாவிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவும் வழக்கம் போல் கடுமையான மதுபோதையில் வீட்டிற்கு வந்த குமார், ரம்யாவுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கணவனின் தொடர் வேதனையாலும் ஆத்திரத்தாலும் எல்லை மீறிய ரம்யா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குமாரின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குமார், ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கணவர் இறந்த அதிர்ச்சியிலும், பயத்திலும் ரம்யா உடனடியாக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்குச் சென்று நடந்ததைக்கூறி சரணடைந்தார்.

தகவல் அறிந்த வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையிலான கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குமாரின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே நேரில் வந்து கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவனைக் மனைவியே கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுப் பழக்கத்தினால் ஒரு குடும்பத்தின் நிம்மதி சீர்குலைந்து, மூன்று குழந்தைகள் ஆதரவற்று நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை வரவழைத்துள்ளது.

Nanthini

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

6 மணத்தியாலங்கள் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

6 மணத்தியாலங்கள் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

6 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

6 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

6 மணத்தியாலங்கள் ago