உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி ஐந்து முறை திருமணம் செய்து கொண்டு தற்போது தன்னுடைய சகோதரனோடும் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ் அக்ரஹரி. காய்கறி வியாபாரியான இவருடைய மனைவி குடியா. திருமணமான சில மாதங்களுக்குப் பிறகு குடியாவின் நடத்தை மாறியுள்ளது. குடியாத் ஏற்கனவே நான்கு முறை திருமணம் செய்து கொண்டதாகவும், அதில் மூன்று முறை ஃபதேபூரில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பங்கஜை ஐந்தாவதாக திருமணம் செய்துள்ளார். இப்பொழுது தன்னுடைய கணவரின் சகோதரனுடன் தகாத உறவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் கணவர் பங்கஜ், தன்னையும், தன்னுடைய பெற்றோரையும் மனைவி வீட்டை விட்டு வெளியேற்றதாகவும், அடியாட்களை வைத்து தங்களை அடிக்க பலமுறை சதி செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தனது சகோதரனுடனான உறவை அவர் கைவிட்டால் அவரோடு வாழ தயார் என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளார்கள் .
