குபேரா வெற்றியால் எகிறிய மார்க்கெட்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இணையும் தனுஷ்..!

By Nanthini on ஆனி 24, 2025

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான குபேரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த திரைப்படம் தமிழை விட தெலுங்கில் தான் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று சொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் அங்கு மிகப் பெரிய வெற்றி விழாவே நடத்தப்பட்டு விட்டது.

ஒரு நாளைக்கு நடிகர் தனுஷ் வாங்கும் சம்பளம்.. இத்தனை கோடியா!

   

இன்னும் சில நாட்களில் குபேரா திரைப்படம் 100 கோடியை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குபேரா வெற்றியை தொடர்ந்து தனுஷ் மார்க்கெட் எகிறி உள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ராயன்  திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி இருந்தது. அதனைப் போலவே தனுஷ் நடித்த வாத்தி மற்றும் திருச்சிற்றம்பலம் படங்களின் வசூலும் சுமார் 100 கோடியை தாண்டி உள்ளது.

   

சினிமாவையே மூச்சாக கொண்டு செயல்படும் தனுஷ்.. பிறந்தநாள்ல கூட வேலையில் பிசி!  | Actor Dhanush busy on post production of Thiruchitrambalam and Naane  varuven movies on his birthday - Tamil ...

 

இந்த பட்டியலில் தற்போது குபேரா திரைப்படமும் இணையும் என தெரிகிறது. தமிழை விட தெலுங்கில் தற்போது தனுசுக்கு மார்க்கெட் அதிகரித்துள்ளது. சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்து அங்கேயும் தனுஷ் ஹிட் கொடுத்துள்ளதால் சாட்டிலைட், டிஜிட்டல் விஷயத்தில் தனுஷ் படங்களுக்கு நல்ல மவுசு உள்ளது. அடுத்ததாக தனுஷ் இட்லி கடை திரைப்படத்தை இயக்கி நடித்து வரும் விலையில் இந்த திரைப்படம் வெற்றி பெற்றால் தனுஷ் சம்பளம் சுமார் 50 கோடி வரை செல்லும் என்று தெரிகிறது.

தனுஷ் மார்க்கெட் எகிறுகிறது : சம்பளம் 50 கோடி?

தமிழில் 50 கோடி சம்பளத்தை தாண்டிய நடிகர்கள் என்றால் அது ரஜினி, கமல், விஜய், அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற ஒரு சில நடிகர்கள் மட்டும்தான். அவர்களின் பட்டியலில் தனுஷ் தற்போது இணைய உள்ளார். இட்லி கடை திரைப்படத்தை முடித்த கையோடு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் அடுத்ததாக ஜனநாயகன்பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.