“மாட்டிகின்னாரு மாட்டிகின்னாரு ஒருத்தரு” சுவரில் ஓட்டையிட்டு தானே மாட்டிக்கொண்ட நபர்… என்ன காரணம் தெரியுமா..??

By Soundarya on ஆனி 24, 2025

Spread the love

பிரேசிலில் ஒரு கைதி சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற போது அவருடைய உடலானது பாதி துளையிட்ட சுவற்றில் சிக்கிக் கொண்ட சம்பவம் வைரல் ஆகி வருகிறது .பிரேசிலின் ரியோ பிராங்கோவில் உள்ள ஒரு சிறையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த கைதியின் பெயர்ஆலன் லியாண்ட்ரோ டா சில்வா. 32 வயதான அவர் ஆணிகளையும், துடைப்பத்தையும் பயன்படுத்தி இரண்டு நாட்களில் அந்த சுவரில் துளையிட்டுள்ளார்.

அதன் பிறகு காவலர்கள் பாதுகாப்பில் இல்லாத நேரத்தில் அவர் அந்த துளையின் வழியாக தப்பிக்க முயன்ற போது தான் அதில் சிக்கி உள்ளார். இதை சிறை கண்காணிப்பாளர் கண்டுபிடித்துள்ளார். அதன் பிறகு தீயணைப்பு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவருக்கு காயங்கள் ஏற்படாமல் மீட்டுள்ளார்கள். அவருடைய தப்பிக்கும் முயற்சி தோல்வி அடைந்தாலும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளார்.