திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணம் ஆகி 20 நாட்களே ஆன நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். ஜெயஸ்ரீ என்ற பெண்ணுடன் கடந்த நான்காம் தேதியை இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து 20 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் கடந்த ஒரு வாரமாக புதுமண தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவத்தன்று அதிகாலை 3 மணி அளவில் கார்த்திகை ஏன் தன்னுடைய மனைவி ஜெயஸ்ரீயை ரூமில் அடைத்து பூட்டிவிட்டு மற்றொரு அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெயஸ்ரீ ஜன்னல் கதவை திறக்க கூறி நீண்ட நேரம் கத்திய நிலையில் அருகில் இருந்தவர்கள் உள்ளே வந்து கதவை திறந்து உள்ளனர்.
இந்நிலையில் அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் சம்பவம் பற்றி அறிந்து மாட்டிகச் சென்று பார்த்தபோது கார்த்திகேயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்டு அங்கிருந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் போலீசார் கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் திருமணம் ஆகி 20 நாட்களில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
