பப்ஜி விளையாட்டுக்கு அடிமை… டார்கெட்டை அடைய முடியாத கோபத்தில் மொத்த குடும்பத்தையே சுட்டுக் கொன்ற 14 வயது சிறுவன்… திடுக்கிடும் பின்னணி…!

By Nanthini on புரட்டாதி 25, 2025

Spread the love

பாகிஸ்தான் லாகூர் மாகாணத்தில் வசிக்கக்கூடிய சைன் அலி என்ற 14 வயது சிறுவன் ஒருவன் கடந்த 2022 ஆம் ஆண்டு பப்ஜி விளையாட்டில் அடிமையாகி அதிலிருந்து டார்கெட்டுகளை அடைய முடியாத போது கடும் மன உளைச்சலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவனுடைய இந்த செயலை பார்த்து விளையாட்டில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் என்று தாயார் கண்டித்துள்ளார். இதனால் அந்த சிறுவனுக்கு மேலும் கோபம் ஏற்பட்டுள்ளது.

தன்னுடைய கோபத்தை ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த முடியாத அந்த சிறுவன் வீட்டிலிருந்த கை துப்பாக்கியை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த தாயாரையும் தனது சகோதரன் தைமூர் (20), சகோதரிகள் மனூர் (15), ஜன்னத் (10) ஆகிய மூவரையும் கொடூரமாக சுட்டு கொலை செய்துள்ளான். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் விளையாட்டின் மீது சிறுவன் கொண்ட மோகமும், அடிமைத்தனமும் இந்த கொலைக்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு மூளையில் ஏற்படும் அடிமைத்தனம் மற்றும் ஆபத்தின் விளைவை எடுத்துக்காட்டுகின்றது. படிக்கும் வயதில் செல்போன் பயன்படுத்துவதை குழந்தைகள் தவிர்ப்பது தான் நல்லது என்பதை எடுத்துரைக்கிறது.