தேனி மாவட்டம் முந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீனா. திருமணமான பிரவீனா போடி தேனி நெடுஞ்சாலையில் பங்காருசாமி கண்மாய் நுழைவு அப்பகுதியில் சடலமாக கிடந்தார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீனாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. முதலில் பிரவீனா தனது தாய் மாமாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாசுகாளை என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது கணவருடனும் அடிக்கடி சண்டை போட்டு பிரவீனா தனது தந்தை தங்கையாவின் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று கணவரிடம் கோபித்துக் கொண்டு பிரவீனா தந்தை வீட்டிற்கு கிளம்பினார். அவரை சமாதானப்படுத்தி கணவர் வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக தங்கையா போடி பங்காரு சாமி கண்மாய் அருகே தனது மகளை சந்தித்து பேசி உள்ளார். ஆனால் கணவர் வீட்டிற்கு செல்ல பிரவீனா சம்மதம் தெரிவிக்காதுதால் தங்கையா பூச்சி மருந்தை கொடுத்து தனது மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் தங்கையாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
