கர்நாடகா மாநிலம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த கதிரம்மா ( 35). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வெங்கடரமணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணத்தினால் பேசிக்கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே கதிரம்மாவுக்கும் பக்கத்து வீட்டில் உள்ள வேணு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளத்தொடர்பாக மாறிவுள்ளது. வேணு மற்றும் கதிரம்மா இருவரும் தனிமையில் உல்லாசமாக இருப்பது மற்றும் வெளியில் சுற்றி திரிவது போன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளன. இதை அறிந்த கணவன் ரமணா மனைவியை கண்டித்துள்ளார். எவ்வளவு கண்டித்தும் கதிரம்மா உறவை துண்டிக்கவில்லை.
சமீபத்தில் ஒரு நாள் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கணவனுக்காக சமைக்காமல் கதிரம்மா போனில் பேசிக்கொண்டு இருந்து உள்ளார். போனை பறித்து பார்த்தபோது அதில் வேணு பேசிக் கொண்டே இருந்தது தெரியவந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த ரமணா, பின்பு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சிக்கு போன ரமணா கதிரம்மாவை அடித்துள்ளார். இதனால் வேணு மற்றும் கதிரம்மா இருவரும் சேர்ந்து ரமணாவை கொலைச் செய்யமுடிவு எடுத்துள்ளனர். அதன்படி இரவு வேணுவை வீட்டிற்கு வரவழைத்த ரமணாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இந்த இருவரும் வேணுமின் காரில் உடலை எடுத்துக் கொண்டு தொலைதூரத்தில் எரிந்து விடலாம் என்ற எண்ணத்தில் சென்று உள்ளனர். எங்க தேடியும் சரியான இடம் அமையாததால் இரண்டு நாட்கள் காலிலேயே உடலை வைத்துக்கொண்டு சுற்றி உள்ளனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத காடு ஒன்று தென்பட்டது அங்கு காரை விட்டுவிட்டு வழக்கம் போல் வீட்டிற்கு வந்து வேலையை பார்த்துள்ளனர். ரோந்து பணியில் இருந்த போலீசார் கண்ணில் கார் பட்டுள்ளது பின்பு ஏதோ துர்நாற்றம் வீசுவதால் காரை திறந்து பார்த்த போது தான் உடல் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் காரின் எண்ணை வைத்து வேணுவை கைது செய்தனர். விசாரணையில் வேணு நடந்த அனைத்தையும் சொல்லி உள்ளார். அதனால் கதிரம்மாவையும் கைது செய்து உள்ளனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…
வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…
தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…