பிரிந்து சென்ற மனைவி… துக்கத்தில் ஒரு மாதமா பீர் மட்டுமே குடித்து உயிரை விட்ட கணவன்… இப்படியுமா நடக்கும்…?

By Nanthini on ஆடி 28, 2025

Spread the love

மனைவி விவாகரத்து செய்ததால் வருத்தம் அடைந்த ஒருவர் ஒரு மாதமாக எதையும் சாப்பிடாமல் பீர் மட்டுமே குடித்து உயிரிழந்த துயர சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது. மனைவி பிரிந்தால் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்ன கொண்டாடும் ஆண்கள் இருக்கும் காலத்தில் இப்படி ஒரு நபரும் உள்ளார். தாய்லாந்தில் தவிசாக் (44) என்பவருக்கு அண்மையில் மனைவியுடன் விவாகரத்து ஆனது. ஆனால் மனைவி பிரிந்த துக்கத்தை தாங்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர் சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். நாள் முழுவதும் தொடர்ந்து பீர் குடித்து வந்துள்ளார்.

இதனால் உடல் உறுப்புகள் செயலிழந்து அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. ஒரு தொண்டு நிறுவனம் அவரை மருத்துவமனையில் சேர்க்க முயன்ற நிலையில் இருந்தாலும் அந்த நிறுவனங்கள் அவரது வீட்டை அடைவதற்குள் அந்த நபர் இறந்துவிட்டார். போலீசார் அவருடைய அறையில் சுமார் 100 பீர் பாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அதிகமாக மது அருந்தியதால் அவர் உயிரிழந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.