மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் (IB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: செக்யூரிட்டி அசிஸ்டன்ட், எக்ஸிக்யூட்டிவ்
காலி பணியிடங்கள்: 4,987
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
தேர்வு முறை: எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவணங்கள் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 17
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.mha.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
