ஐயோ நெஞ்சே பதறுது… கால்வாயில் தவறி விழுந்து 2 வயது பெண் குழந்தை பரிதாப பலி… சோக சம்பவம்…!

By Nanthini on ஆடி 28, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பரப்புவிளை அம்மன் கோவில் தெருவில் மகேஷ் மற்றும் மஞ்சு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு மூன்று வயதில் சுதீஷ் என்ற மகனும், இரண்டு வயதில் நமித்ரா என்ற மகளும் இருந்தனர். இப்படியான நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தை நமித்ரா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென குழந்தையை காணவில்லை. இதனைத் தொடர்ந்து அவருடைய தாயார் தனது குழந்தையை பதற்றத்துடன் தேடிப் பார்த்த நிலையில் அருகில் இருந்த கால்வாயை பார்த்தபோது குழந்தை தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே கூச்சலிட்டார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் பின்னர் ஓடி வந்து தண்ணீரில் மூழ்கிய குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.