உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் ஹர்கான் பகுதியில், கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரா என்பவருக்கும் நீலம் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக நீலத்திற்கு கபில் என்ற நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக தனது முதல் கணவரைப் பிரிந்து, கபிலுடன் வாழ முடிவு செய்த நீலம், வீட்ட விட்டு வெளியேறி அவருடன் சென்று நீதிமன்றத்தில் திருமணமும் செய்து கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.
மனைவி வேறொரு நபருடன் ஓடிப்போய் வாழத் தொடங்கியதை அறிந்து பெரும் ஆத்திரமடைந்த கணவர் ராஜேந்திரா, நீலம் எங்கு இருக்கிறார் என்பதைத் தீவிரமாகத் தேடி வந்துள்ளார். இறுதியாக அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்த ராஜேந்திரா, சில நபர்களுடன் கபிலின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வைத்து கபிலை கடுமையாகத் தாக்கிய அவர், தனது மனைவி நீலத்தை வலுக்கட்டாயமாகத் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
https://twitter.com/pulsenewsbreak/status/2104933753391071657/video/1
வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு, கோபத்தின் உச்சத்தில் இருந்த ராஜேந்திரா, நீலத்தின் நெஞ்சில் அமர்ந்து கத்தியால் அவரது மூக்கை கொடூரமாக அறுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து ராஜேந்திரா தப்பி ஓடிவிட, படுகாயமடைந்த நீலம் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய ராஜேந்திராவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
