“தீயில் நாயை சுட்டு சாப்பிட முயற்சி…” நெஞ்சை நடுங்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ… கொந்தளித்த விலங்கு ஆர்வலர்கள்…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 30, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் சய்யான் பகுதியில் உள்ள ‘பஷு ஹாட்’ மைதானத்தில், நாய் ஒன்றை உயிருடனோ அல்லது கொன்றோ விறகு அடுப்புத் தீயில் சுட்டு வறுப்பது போன்ற நெஞ்சை நடுங்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நபர் ஒருவர் விறகு அடுப்புத் தீயின் மீது நாயைச் சுட்டுக் கொண்டிருக்கும் கொடூரக் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த மிருகத்தனமான செயலைக் கண்டு விலங்கு நல ஆர்வலர்களும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சியடைந்து குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இணையத்தில் கொதித்தெழுந்துள்ளனர்.

   

இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஆக்ரா காவல்துறையினர், வைரல் வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தும், இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட நபரைக் கண்டறிந்து கைது செய்யவும் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.