கேரள மாநிலம் நொச்சுளி பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார். 40 வயதான இவர் நகைக்கடை ஊழியர். இவருடைய மனைவி சித்ரா கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இதற்கிடையே சித்ராவுக்கும், சங்கத் தலைவரான விஜீஸ் சஹதேவன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேரும் நெருங்கி பழகி வந்துள்ளார்கள். இது மனோஜ் குமாருக்கு தெரிய வந்ததால் தன்னுடைய மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் மனைவி அந்த நபரோடு தொடர்ந்து பழகி வந்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த மனோஜ் குமார் சம்பவத்தன்று விஷம் கொடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார் . .மனோஜ் குமாரின் சாவில் சந்தேகம் உள்ளதாக அவருடைய குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்த விசாரணையில் விவகாரத்து கோரி சித்ரா, விஜீஸ் சஹதேவனுடன் சேர்ந்து மனோஜ் குமாரிடம் பணம் கேட்டு மிரட்டி வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்கள். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மனோஜ் குமார் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
