மதுரை மாவட்டம் விராதனூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற ஆடு மாடுகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். மேடை முன்பாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டின மாடுகள், ஆடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆடு மாடுகளோடு தொடங்கிய இந்த மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது மேடையில் பேசிய சீமான், “ஆடு மாடு மேய்ப்பதற்கு தடை போட்டால் மேச்சல் நிலங்கலை உருவாக்க வேண்டும்.
தரிசு நிலத்தை மேய்ச்சல் நிலம் என்று சொல்ல வேண்டும். தயிர், நெய், சீஸ், வெண்ணை எல்லாம் வேணும். ஆனா எல்லாத்தையும் வக்கணையா திங்கிற வெண்ணைகள் எங்கள போஸ்டரை திங்க விடுறீங்க? உங்களுக்கு எதுக்கு 6வது அறிவு? பசங்களுக்கு படிப்பு வரலைனா நல்லா சொல்லி கொடுங்க. அதை விட்டுட்டு ஆடு, மாடு மேய்க்கதான் லாயக்கினு சொன்னா என்ன அர்த்தம்? அவ்ளோ கேவலமா போய்ட்டோமா? நாட்டு மாடுகளை அழிக்கத்தான் நவீன விவசாயம் கொண்டு வரப்பட்டது .எங்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்பதே இந்த மாநாட்டில் ஆடு, மாடுகள் வைக்கும், கோரிக்கை என்று ஆடு மாடுகளின் குரலாக பேசியுள்ளார்.
