இன்றைய காலத்தில் செல்போனின் பயன்பாடு அதிகரித்து விட்டது. செல்போன் வைத்திருப்பவர்களிடம் இ மெயில் இல்லாமல் இருக்காது. இதை பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு தற்போது இ மெயில் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது பல்வேறு தளங்கள் இருந்தாலும் இமெயில்(ஜி மெயில் ) தான் முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதும் 150 கோடி இமெயில் கணக்குகள் இருக்கிறது. அந்த வகையில் தற்போது இ மெயிலில் புதிய டூல் ஒன்றை google அறிமுகம் செய்துள்ளது.
மெயில் இன்பாக்சில் குவியும் நியூஸ் லெட்டர் உள்ளிட்ட அவசியமற்ற மெயில்களை மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன் எனும் புதிய டேப் கீழ் கொண்டு வர gmail திட்டமிட்டு இருக்கிறது. இப்படி செய்யும் பொழுது நியூஸ் லெட்டர், டீல்ஸ் மற்றும் வியாபார ரீதியான மெயில்களை எளிதில் கண்டறிந்து வகைப்படுத்தலா.ம் இதனால் இன்பாக்ஸில் தேவையில்லாமல் குவிந்திருக்கும் மெசேஜ்களை ஃபில்டர் செய்து விட்டு தேவையானவற்றை மட்டும் எடுத்து பார்க்க முடியும் என்பதால் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
