“நான் கொலை பண்ணல.. பயத்தில் உடலை துண்டு துண்டாக வெட்டி…” 2 ஆண்டுகளாக மாயமான மனைவி… கணவரின் பகீர் வாக்குமூலம்… அதிர்ச்சி பின்னணி…!!

Spread the love

அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் தனது மனைவி மாயமானதாக 2 ஆண்டுகளாகக் கூறிவந்த இந்திய வம்சாவளி கணவர் நரேஷ் பாட், தற்போது நீதிமன்றத்தில் தனது மனைவியின் உடலை வெட்டி குப்பைத்தொட்டியில் வீசியதை ஒப்புக்கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் செவிலியராகப் பணியாற்றி வந்த நேபாள வம்சாவளியைச் சேர்ந்த மம்தா கப்லே பாட் (28) என்ற பெண், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி முதல் மாயமானார். அவர் உயிருடன் இல்லை என அதிகாரிகள் சந்தேகித்த நிலையில், அவரது கணவர் நரேஷ் பாட் (39) மீது முதல் நிலை கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் தனது தரப்பு சாட்சியத்தை அளித்த நரேஷ் பாட், 2024 ஜூலை 29 இரவு தனது மனைவி படுக்கையின் அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாக்கெட்டுடன் வாந்தி எடுத்த நிலையில் உணர்வின்றி கிடந்ததைக் கண்டதாகக் கூறியுள்ளார். அவசர உதவி எண்ணிற்குத் தொடர்பு கொள்ளப் பயந்த அவர், மனைவியின் உடலை மறைப்பதற்காக உடலைத் துண்டு துண்டாக வெட்டி குப்பைப்பைகளில் போட்டு அகற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மனைவியை தான் கொலை செய்யவில்லை என்றும், அவர் தற்கொலை செய்துகொண்டதால் பயத்தில் உடலை அப்புறப்படுத்தியதாகவும் நரேஷ் பாட் வாதிட்டு வருகிறார். எனினும், இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அவரிடம் தீவிர குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

ஐயோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கையில் பட்டாசை வெடிக்க வைத்த இளைஞருக்கு… 5.5 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை… பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிடுவதற்காக இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்கள். சிலர் உயரமான இடங்களில் ஏறி ஆபத்தான…

12 minutes ago

அட கடவுளே… மகனைத் தூக்கிக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்… கதறித் துடிக்கும் கணவர்… நெடுனூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

ஃபியூச்சர் சிட்டி எல்லைக்குட்பட்ட நெடுனூர் பகுதியில் உள்ள மான்யகுடா தாண்டாவைச் சேர்ந்த அனுஷா என்ற திருமணமான பெண், பிரேம் குமார்…

29 minutes ago

உஷார் மக்களே… பெட்ரோல் பங்கில் நடக்கும் பகீர் மோசடி… ரகசியத்தை உடைத்த ஊழியர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மக்களின் அன்றாடப் பயணத்திற்குத் தவிர்க்க முடியாத இடமாக இருக்கும் பெட்ரோல் பங்குகளில், பணத்திற்கு ஏற்ற சரியான அளவு எரிபொருள் ஊற்றப்படுகிறதா…

48 minutes ago