மக்களின் அன்றாடப் பயணத்திற்குத் தவிர்க்க முடியாத இடமாக இருக்கும் பெட்ரோல் பங்குகளில், பணத்திற்கு ஏற்ற சரியான அளவு எரிபொருள் ஊற்றப்படுகிறதா என்ற சந்தேகம் நீண்ட காலமாகவே பொதுமக்களிடையே உள்ளது. குறைவான அளவு பெட்ரோல் ஊற்றப்படுவதாகப் பலரும் தொடர்ந்து புகார் கூறி வரும் நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாகப் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜேபி பெட்ரோ ஃபுயல்ஸ்’ நிறுவனத்தில் பணிபுரியும் குட்டு காஷ்யப் என்ற ஊழியர், வாடிக்கையாளர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்ற ரகசியத்தை அந்த வீடியோவில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். வாடிக்கையாளர்கள் 100, 200 அல்லது 500 ரூபாய் என எந்தத் தொகைக்குப் பெட்ரோல் கேட்டாலும், ஊழியர்கள் முதலில் அந்தத் தொகையை இயந்திரத்தில் சரியாகப் பதிவிடுவார்கள்.
https://www.instagram.com/reel/DfguupxNqHB/?utm_source=ig_web_button_share_sheet
ஆனால், எரிபொருள் நிரப்பும் குழாயை மீண்டும் இயந்திரத்தில் வைக்கும் தருணத்தில் சில தொழில்நுட்பத் தந்திரங்களைப் பயன்படுத்தி, வாடிக்கையாளருக்குச் சேர வேண்டிய பெட்ரோலின் அளவைக் குறைத்து விடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பெட்ரோல் பங்குகளில் நடக்கும் இந்த நூதன மோசடியை விளக்கும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி, வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…
குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…
அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…