உத்தரபிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில், சாலையின் நடுவில் ஒரு நபர் தனது மனைவியை கொடூரமாக அடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை மசௌரா தடுப்புக்கு அருகிலுள்ள தானா சதார் கோட்வாலி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோவில், அந்த நபர் தனது மனைவியை தரையில் இழுத்துப்போட்டு அடிப்பதை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் அவர்களின் குழந்தையும் பக்கத்தில் உள்ளது. அந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஜான்சியிலிருந்து சாகர் நகருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார்.
வழியில், ஏதோ ஒரு விஷயத்தில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதில் அந்த நபர் தனது மனைவியை அடிக்கத் தொடங்கினான். அப்போது அருகில் இருந்தவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு கணவன்-மனைவி இருவரையும் பிரித்து, அந்த நபரை கடுமையாக கண்டித்தனர். இதன் பின்னர், அந்த இளைஞன் தனது மனைவி மற்றும் குழந்தையை பைக்கில் ஏற்றிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
