இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்றாலே பல கோடி ரூபாய் செலவு செய்வதை தான் அனைவரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தியாவில் திருமணங்கள் என்றாலே ஒரு திருவிழாவைப் போல நடத்தப்படுகிறது. பல்வேறு குடும்பங்களும் இளைஞர்களும் திருமணத்திற்காக மட்டுமே பல லட்சங்களை செலவிடுகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு சமூகத்திற்கும் இருக்கும் பழக்க வழக்கத்திற்கு ஏற்றவாறு திருமணம் நடைபெற்றாலும் செலவு என்பது என்னவோ அதிகமாக தான் உள்ளது. ஒரு நாள் கூத்துக்காக கடனை வாங்கி பல லட்சம் செலவு செய்து அதை வாழ்நாள் முழுவதும் அடைக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் ஏராளம். இப்படிப்பட்ட காலத்தில் ஒரு தம்பதியினர் வெறும் 1200 ரூபாய்க்குள் தங்களுடைய ஒட்டுமொத்த திருமண செலவுகளையும் முடித்துள்ளனர்.
இந்த காலத்திலும் இப்படியா என்ற ஆச்சரியம் எழுகிறது. ராஜஸ்தானை சேர்ந்த கமல் அகர்வால் தன்னுடைய திருமணத்திற்காக 1592 ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளார். கமல் அகர்வால் தன்னுடைய காதலி ருச்சி என்பவரை அன்னையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண செலவு குறித்து ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். இருவரும் கடத மே 18ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் பதிவு திருமணம் தவிர்த்து தங்கள் திருமணத்திற்காக வேறு எந்த செலவையும் அவர்கள் செய்யவில்லை.
மெஹந்தி விழா மற்றும் ஆடம்பரமான ஆடைகள் என எதுவுமே இல்லாமல் 320 ரூபாய் திருமண பத்திரப்பதிவு தாள், 400 ரூபாய் பப்ளிக் நோட்டரிக்காக செலவு, 260 ரூபாய் புகைப்படம் எடுப்பதற்கான செலவு, டிக்ளரேஷன் ஃபார்ம் பிரின்டிங் மற்றும் பிற செலவுகளுக்காக 290 ரூபாய் செலவு, மற்ற செலவுகளுக்காக 322 ரூபாய் என மொத்தமாகவே 1592 ரூபாய் தான் செலவு செய்துள்ளனர். இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
