திருமணமாகி ஒரே வருடத்தில் இப்படியா?.. திடீரென மயங்கிய மனைவி… மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடிய கணவன்… அடுத்த நொடியே நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 12, 2025

Spread the love

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் அருகே உள்ள ஆணமங்காடு பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவருடைய மகள் வைஷ்ணவி (26). இவருக்கும் பாலக்காடு மாவட்டம் ஸ்ரீ கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த தீக்ஷித் (26) என்ற வாலிபருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே சம்பவத்தன்று இரவு வைஷ்ணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி தீக்ஷித் மாங்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் வைஷ்ணவி மயங்கி நிலையில் இருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிரசிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனால் அவருடைய உடலில் காயங்கள் இருந்ததால் மருத்துவர்களுக்கு சந்தேகம் எழுந்து உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வைஷ்ணவியின் கணவர் தீக்ஷித்தை பிடித்து கிடக்கு பிடி விசாரணை நடத்தியதில் குடும்ப தகராறில் வைஷ்ணவியை அவர் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்த நிலையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.