BREAKING: அடுத்த பரபரப்பு… தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…!

By Nanthini on ஐப்பசி 12, 2025

Spread the love

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல இயக்குனர் டி ராஜேந்தர் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக பிரபலங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.