விஜய் ஒரு பெஸ்ட் நியூஸ் ரீடர்… அவருக்கே சினிமாவிலேயே அறிவு இல்ல… … சீமான் விலாசல்…!

By Nanthini on ஐப்பசி 12, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பாஜக இபிஎஸ் மூலமாக விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே விஜய் கட்சி ஆரம்பித்த தொடக்கத்திலிருந்து சீமான் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றார். இந்நிலையில் ஒரு சிறந்த விலைமதிப்பு மிக்க செய்தி வாசிப்பாளர் போல விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக சீமான் விமர்சித்துள்ளார். விஜய் ஒரு தனி விமானத்தில் பிரச்சாரத்திற்கு செல்கிறார். அங்கு போய் “என்ன எல்லாரும் நல்லா இருக்கீங்களா?” என கேட்கிறார். எனவே விஜய் ஒரு பெஸ்ட் நியூஸ் ரீடர். காஸ்ட்லி நியூஸ் ரீடர். 5 ஆண்டுகளில் தண்டவாளம் போடுவேன் என சொன்னார்களே போட்டார்களா? என பார்த்து பார்த்து செய்தி படிப்பது போல் அதை சப்தமாக படிக்கிறார் விஜய். அதை கூட்டமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

   

விஜய்க்கு அவர் சார்ந்த சினிமா துறையிலே முழு அறிவு கிடையாது என்று கடுமையாக சாடிய சீமான், அந்தத் துறையில் எழும் பிரச்சனைகளுக்கே விஜய்யால் தீர்வு காண முடியாது எனவும் குறிப்பிட்டார். மேலும் விஜய்க்கு முன்னால் செல்லும் நண்பா, நம்பிகள், தனது தம்பி, தங்கைகள் எனவும் சீமான் தெரிவித்தார்.