“பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் பலி”… தாலிபான் அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

By Soundarya on ஐப்பசி 12, 2025

Spread the love

பாகிஸ்தான் படையினருக்கு எதிரான பதிலடித் தாக்குதலில், 58 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 9 தாலிபான் வீரர்கள் மட்டுமே பலியானதாகவும், பாகிஸ்தான் படைகளின் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும்  கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் வேண்டுகோளை ஏற்று தற்போது தாக்குதல்களை நிறுத்திவிட்டதாகவும் தாலிபான் அரசானது கூறியுள்ளது.