BREAKING: கரூர் துயரத்தில் அதிரடியாக கைது… சற்றுமுன் பதற்றம் உருவானது..!!

By Soundarya on ஐப்பசி 12, 2025

Spread the love

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனையடுத்து இந்த சம்பவத்தில் வதந்தி பரப்பியவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகிறர்கள். அந்தவகையில், கரூர் சம்பவம் குறித்து  வதந்தி பரப்பியதாக தவெகவின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் S.M. நிர்மல்குமாரை சாணார்பட்டி காவல்த்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெக தொண்டர்கள், நிர்மல்குமாரை விடுவிக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்திற்குள் நுழைந்ததால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. அவர்களிடம் காவல்துறையினர் சமரச பேச்சில் ஈடுபட்டுள்ளனர்.