பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியை சேர்ந்த ருடல் தாஸின் 19 வயது மகன் சுபம் குமார் மற்றும் 18 வயது முன்னி குமாரி ஆகிய இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து, பின்னர் வீட்டை விட்டு காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்தது. ஆனால் எட்டு மாதங்களுக்குப் பிறகு, இந்த புதுமண தம்பதிகள் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக கணவர் பேஸ்புக்கில் தம்பதியினர் புகைப்படத்தை வெளியிட்டு GOOD BYE என்று எழுதியுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பட்டப் பகலில் கணவன் மனைவி ஒன்றாக தற்கொலை செய்து கொண்ட சமூகம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
