தமிழ் திரையுலகில் மிகப்பெரிய படமான எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மஞ்சு வாரியர் மற்றும் பல பிரபலங்கள் நடித்து பிரபலமான படம் தான் துணிவு படம், கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகி பெரும் வெற்றியை கண்டது, இப்படத்தில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கிறவர்கள் மூலமாக அஜித் அவர்கள் வங்கியில் நடக்கும் மோசடிகளை வெளியே கொண்டு வந்திருப்பார்,
அந்த வங்கியை நடத்தும் பேங்க் மேனேஜ்மென்டில் ஒருவராக நெகட்டிவ் ரோலில் நடித்தவர் தான் “சித்துராஜ் சிங்” அவர்கள் இப்படம் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார் என்று கூறலாம், இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழில் பலபலங்கள் நடித்துள்ளார், இங்குள்ள பல நடிகர் எப்படி வெளி மாநிலம், மற்ற மொழி பேசுபவர்கள் தமிழில் நடிக்கிறார்களோ, அதே போல் இவரும் பல மொழிகளில் நடித்திருந்தாலும் தமிழில் இவருக்கென்று ஒரு இடம் உள்ளது.
59 வயதான ரித்திக் சிங் இவர் தற்போது மருத்துவமனையில் கணைய பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்தார், ஆனால் அந்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை காலமானார், இதை தொடர்ந்து பல பிரபலங்கள் இதற்கு இரங்கல் தெரிவித்து, நேரில் சென்று அவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
