குண்டடிபட்டு மருத்துவமனையில் இருந்த எம்.ஜி.ஆரை பார்க்க சென்ற சிவகுமார்.. ஒற்றை கேள்வியால் கண்ணீர்விட்ட அழுத சம்பவம்..

By Begam on மாசி 20, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக முடி சூடா மன்னனாக வலம் வந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவர் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் கொடி கட்டி  பறந்தவர். தமிழகத்தின் முதல்வராக இவர் செய்த நலப்பணிகள் ஏராளம். ஏழை எளிய மக்களிடம் எப்பொழுதும் அன்பாக பழகக் கூடியவர் எம்ஜிஆர். எனவே இவரை பிடிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது.

   

எம்ஜிஆர் ஒரு நல்ல மனிதர் மட்டுமின்றி மனிதாபிமானமும் கொண்டவர். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் என பல துறைகளிலும் வித்தவராக இருந்தவர். அவர் நடிக்கும் படங்களில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும் பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதை எல்லாம் குறித்து அவர்தான் எப்பொழுதும் முடிவு செய்வார்.

   

 

தற்பொழுது இவரின் மனிதாபிமானத்திற்கு சான்றாக ஒரு நிகழ்ச்சியை இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம். அதாவது 1967 இல் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் காவல்காரன். இந்த திரைப்படத்தில் எம்ஜிஆருக்கு தம்பியாக நடிகர் சிவகுமார் நடித்திருப்பார். அப்பொழுது அவருக்கு எம்ஜிஆர் உடன் பேச சந்தர்ப்பம் கிடைத்ததால், ‘தன் அம்மா கையில் அடிபட்டு ஆறு மாத காலம் வீட்டில் கஷ்டப்பட்டு இருந்த நேரத்திலும், என்னிடம் சொன்னால் எங்கே என் சினிமா வாழ்க்கை பாழாகி விடுமோ..? என்ற காரணத்தினால், என்னிடம் என் அம்மா சொல்லவே இல்லை’ என்று தன் சொந்த கதையை எம்ஜிஆரிடம் கூறி இருக்கிறார்.

#image_title

இந்த சம்பவம் முடிந்த  ஒரு சில மாதங்களிலேயே, எம்ஜிஆருக்கு குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதை கேட்ட சிவக்குமார் உடனே எம்ஜிஆர் பார்க்க வேண்டும் என்று எண்ணி அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்துள்ளார் .இரண்டு முறை சந்தித்துள்ளார். மீண்டும் மூன்றாவது முறையும் பார்க்க சென்றுள்ளார். அப்பொழுது எம்.ஜி.ஆர் அவரை பார்த்ததும் ‘நீ சிவகுமார் தானே..? உன் அம்மா கை இப்போ எப்படி இருக்கிறது’ என்று கேட்க, சிவகுமார் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாம்.  இதுபோன்ற மனிதர்கள் இன்னும் இருக்கிறார்களா..? எவ்வளவு ஞாபகமாக கேட்கிறார்…? என்று  எம்ஜிஆரின் மனிதாபிமானத்தை பற்றி பேட்டி ஒன்றில் சிவகுமார் இத்தகவலை கூறியுள்ளார்.