பிரபல நடிகர் மற்றும் நகைச்சுவை கலைஞர் வீர் தாஸ் (Vir Das) விமானத்தில் பயணித்தபோது, சக பயணி ஒருவர் செய்த அநாகரிகமான செயல் குறித்து சமூக ஊடகமான ‘X’ தளத்தில் பதிவிட்டிருந்தார். உணவு பரிமாறப்படும் நேரத்தில், தனக்கு எதிரே அமர்ந்திருந்த பயணி ஒருவர் தனது காலணிகளைக் கழற்றிவிட்டு, ஜன்னல் அருகே உள்ள விமானச் சுவரில் வெறும் கால்களை நீட்டி, மற்றொரு காலால் சொறிந்து கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பயணி அசெளகரியத்துடன் உணவருந்த முயன்றதையும் சுட்டிக்காட்டி, “இப்படி நடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று வீர் தாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த விவகாரம் விமான பயண ஒழுக்கநெறிகள் குறித்த பெரிய விவாதத்தை இணையத்தில் கிளப்பியுள்ளது. பல நெட்டிசன்கள் அந்தப் பயணியின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொது இடங்களில், அதுவும் சக பயணிகள் உணவு சாப்பிடும் நேரத்தில் இத்தகைய சுகாதாரமற்ற முறையில் நடந்துகொள்வது முற்றிலும் அநாகரிகமானது என்றும், விமான ஊழியர்கள் தலையிட்டு இதற்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில், இந்த விவாதம் இருவேறு கருத்துகளாகப் பிரிந்துள்ளது. சிலர், வீர் தாஸ் இதை இணையத்தில் பதிவிட்டு பொதுவெளியில் அவமானப்படுத்துவதற்குப் பதிலாக, நேரடியாக அந்தப் பயணியிடமோ அல்லது விமானப் பணிப்பெண்களிடமோ புகார் அளித்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். “மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் வேலையைப் பாருங்கள்” என்ற ரீதியிலும், “பொது வகுப்பில் பயணிக்கும்போது இத்தகைய குடிமைப் பண்பு இல்லாத மனிதர்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்” என்ற ரீதியிலும் மாற்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…