பார்க்கிங் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக ஒரு நபர் கையாண்ட விசித்திரமான உத்தி குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக, வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த பார்க்கிங் வசதியைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அதற்கான கட்டணத்தைச் செலுத்த விரும்பாத ஒரு நபர், தனது காரின் அடியில் இரண்டு போலி கால்களை செருகி வைத்துள்ளார்.
மேலும் தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு, யாரோ ஒருவர் காரின் அடியில் படுத்து பழுதுபார்க்கும் வேலையில் ஈடுபட்டிருப்பது போன்ற தோற்றத்தை இது உருவாக்குகிறது. கார் பழுதடைந்து சரி செய்யப்படுவதாக மற்றவர்கள் நினைப்பார்கள் என்பதால், அந்த இடத்தில் கார் நீண்ட நேரம் நின்றாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் அல்லது அபராதம் விதிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவர் இவ்வாறு செய்துள்ளார்.
Man avoids parking tickets by placing fake legs under his car to pretend like he’s working on it..
Genius. Lmao pic.twitter.com/ldEwv5x2uW
— American AF 🇺🇸 (@iAnonPatriot) February 26, 2026
“>
இந்த 18 வினாடி வீடியோவில், அந்த நபர் தனது பையை காரின் டிக்கியில் வைத்துவிட்டு, காருக்கு அடியில் அந்த போலி கால்களை லாவகமாகப் பொருத்துவது தெளிவாகத் தெரிகிறது. ‘எக்ஸ்’ தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். நெட்டிசன்கள் பலரும் இதைப் பார்த்து வியந்துபோய், “இது அடுத்த கட்ட அறிவுக்கூர்மை” என்றும், “இப்படி யோசிக்க ஒரு தனி திறமை வேண்டும்” என்றும் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், இது போன்ற ஏமாற்று வேலைகள் சட்டப்படி தவறானது என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். எப்படியோ, பார்க்கிங் கட்டணத்தை மிச்சப்படுத்த அந்த நபர் செய்த இந்த முயற்சி தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
