“அப்பா 2-ம் கல்யாணம் பண்ணிட்டாரு” அந்த 11 லட்சம் என்னோடது… தந்தை மீது வழக்கு தொடர்ந்த 10 வயது மகன்… வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

By Soundarya on மாசி 27, 2026

Spread the love

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன், தனது தந்தை மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்ற சம்பவம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனப் புத்தாண்டு (Lunar New Year) கொண்டாட்டத்தின் போது உறவினர்கள் அன்பளிப்பாக வழங்கிய சுமார் 82,750 யுவான் (சுமார் ₹11 லட்சம்) பணத்தை, சிறுவனின் தந்தை தனது இரண்டாவது திருமணச் செலவுகளுக்காக அவனது அனுமதி இன்றி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பெற்றோர் விவாகரத்து பெற்ற நிலையில், தந்தை பணத்தைத் திருப்பித் தர மறுத்ததால் இந்த சட்டப் போராட்டம் வெடித்தது.

இந்த வழக்கை விசாரித்த சீன நீதிமன்றம், அந்நாட்டின் சிவில் சட்டப்படி சிறுவர்களுக்குக் கிடைக்கும் ‘சிவப்பு உறை’ (Red Envelope) பரிசுப் பணம் என்பது அந்தச் சிறுவர்களின் தனிப்பட்ட சொத்து என்று தீர்ப்பளித்தது. பாதுகாவலராக இருக்கும் பெற்றோர் அந்தப் பணத்தை குழந்தைகளின் கல்வி அல்லது மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்றும் கூறி, பணத்தை உடனடியாக சிறுவனிடம் ஒப்படைக்க South China Morning Post (SCMP) குறிப்பிட்டுள்ளபடி உத்தரவிட்டது.