விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆனந்தி. இவர் பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மிக சிறந்த நடன சூறாவளியாக இவர் அதனை தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். இதைத்தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தார் ஆனந்தி.
இவர் தாரை தப்பட்டை, மீகாமன், ராஜா மந்திரி வாலு போன்ற படங்களிலும் துணை நடிகையாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் 2017ல் அஜய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களது திருமணத்தில் ஆர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.
தற்பொழுது நடிகை ஆனந்தி குழந்தை பிறந்த பிறகு 80 கிலோவில் இருந்து தனது எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார். இது குறித்த பிட்னஸ் சீக்ரெட்களையும் அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார் .அதாவது ஆனந்தி காலையில் எழுந்ததும் தண்ணீரை கொதிக்க வைத்து சீரகம், பட்டை, இஞ்சி, கிராம்பு, போட்டு கொதிக்க வைத்து அதில் மஞ்சள், பெப்பர், லெமன் போட்டு குடிப்பாராம்.
இதை தொடர்ந்து காலை உணவாக கோதுமை மாவு, ஓட்ஸ் மாவு, உலர் திராட்சை, வாழைப்பழம் மற்றும் முட்டை சேர்த்து பேன் கேக் செய்து சாப்பிடுவாராம். மதிய உணவாக நிறைய காய்கறிகளை எடுத்துக் கொள்வாராம். கண்டிப்பாக ஒரு முட்டையும் சாப்பிடுவாராம்.
குழந்தை பிறந்த 4 மாதங்கள் கழித்து தான் ஒர்க் அவுட் செய்ய ஆரம்பித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சுடுதண்ணீர் குடிப்பாராம். சாப்பிட்டு முடித்த பின்பு 45 நிமிடங்கள் கழித்து மீண்டும் சேர்த்து சுடுதண்ணீர் குடிப்பாராம். இது தொப்பையை குறைக்க உதவும் என்றும் தனது பிட்னஸ் சீக்ரெட் குறித்து கூறியுள்ளார் நடிகை ஆனந்தி.
தலைநகர் டெல்லியின் திக்ரி பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் சமைப்பது தொடர்பாகக் கணவன் கமலேஷிற்கும், அவரது 31 வயதான…
மகாராஷ்டிர மாநிலம் புனே நர்ஹே பகுதியில் உள்ள பூம்கர் பாலத்தில், அதிவேகமாக வந்த லாரி ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்ததால்…
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…