“சமைப்பதில் தகராறு…” மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கணவன்… தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதல் பரபரப்பு… பகீர் சம்பவம்…!!

Spread the love

தலைநகர் டெல்லியின் திக்ரி பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் சமைப்பது தொடர்பாகக் கணவன் கமலேஷிற்கும், அவரது 31 வயதான மனைவி பூனமிற்கும் இடையே திடீரெனக் கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது.

சண்டை முற்றியதில் ஆத்திரமடைந்த கமலேஷ், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி பூனமை சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த பூனம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலையை மறைப்பதற்காக, தனது மனைவி தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அக்கம் பக்கத்தினரிடம் கமலேஷ் நாடகமாடியுள்ளார்.

இருப்பினும், அவரது பேச்சில் சந்தேகமடைந்த உள்ளூர்வாசிகள், தப்பிச்செல்ல முயன்ற கமலேஷை அதிரடியாக மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி போலிஸார், கமலேஷைக் கைது செய்து அவருக்குத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“அடப்பாவமே”…. விநாயகரோடு சேர்த்து 7 பவுன் நகையையும் கரைத்த மூதாட்டி… சென்னையில் பரபரப்பு…..!

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3,…

6 minutes ago

“அப்பா அதுக்காக வர மாட்டார்…” அவர் எனக்கு கற்று கொடுத்த பாடம்… ‘சிக்மா’ விழாவில் மனம் திறந்து பேசிய இயக்குநர் ஜேசன் சஞ்சய்…!!

தமிழ்நாடு முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் முழுநீள ஆக்‌ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான 'சிக்மா மூலமாக…

9 minutes ago

“25 ஆண்டுகளில் இல்லாத அதிசயம்”…. செப்டம்பரில் உருவாகும் 4-வது புயல்….. தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை…. வெதர்மேன் அலர்ட்…!

தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் இயல்பை விடக் குறைவாகப் பெய்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுமையாக நிரம்பாமலேயே பாசனத்திற்காகத் தண்ணீர்…

15 minutes ago

“முதலமைச்சராக இருக்கும் என் அப்பாவுக்கு…” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேசன் சஞ்சய்… சிக்மா டிரெய்லர் விழாவில் உருக்கமான பேச்சு…!!

நடிகரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள…

22 minutes ago

“16,000-ஐ கடந்த டெங்கு பாதிப்பு… 9 பேர் பலி”…. தமிழகம் முழுவதும் பதற்றம்…. மருத்துவமனைகளில் உச்சக்கட்ட அலெர்ட்…..!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகள் உச்சகட்ட தயார் நிலையில்…

25 minutes ago

“எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா பேசுங்க…” விஜய்க்காக மேடையில் இறங்கி அடித்த அட்லீ…! விஜய் சேதுபதி முன் அனல் பறக்கும் ஸ்பீச்…!!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்…

31 minutes ago