குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில், கட்டுமான தள மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த 40 வயது நபர் ஒருவர், கடுமையான நிதி நெருக்கடி காரணமாகத் தனது 5 வயது பிஞ்சு மகளைக் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளார்.
அதன் பின்னர், இறந்த தன் மகளுக்கு வெள்ளையாடை அணிவித்து, அவளது சடலத்தை வீட்டிலிருந்த ஃபிரிட்ஜிற்குள் அடைத்து வைத்துள்ளார். தொடர்ந்து தானும் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியில் சென்றிருந்த மனைவி மஞ்சுபென், கணவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல் வீட்டிற்கு நேரில் வந்து பார்த்தபோதுதான் இந்த நெஞ்சை பிழியும் கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.
வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன் தூக்கில் தொங்கிய நிலையிலும், ஃபிரிட்ஜைத் திறந்தபோது 5 வயது சிறுமி சடலமாகவும் கிடந்ததைக் கண்டு அலறித் துடித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸார், அவர் எழுதி வைத்திருந்த 3 தற்கொலைக் கடிதங்களைக் கைப்பற்றினர். அதில் தனக்கு ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், போலிஸார் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…