வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி…? பூஜையின் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ…

Spread the love

இந்து மத வழிபாட்டில் விளக்கு என்பது மிக முக்கியமான ஒன்று. எந்த ஒரு பூஜையை தொடங்கும் முன்னர் விளக்கேற்றி தொடங்குவது முறை. திருவிளக்கு வழிபாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நடந்து வருகிறது. தமிழ் மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கி போற்றி உள்ளனர். சங்ககால இலக்கியங்களும் இந்த வழிபாட்டை மேற்கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது.

திருவிளக்கு மகாலட்சுமியின் அம்சம் ஆகும். கோவில்களில் அனைவரும் ஒன்று கூடி திருவிக்கு பூஜை செய்வதை பார்த்திருப்போம். வீடுகளில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி பூஜையின் போது என்னென்ன விஷாயங்களை கவனிக்க வேண்டும் என்பதை பற்றி இனி காண்போம்.

வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வதால் அஷ்டலட்சுமிகளின் ஆசி கிடைத்து நம் வாழ்க்கை சகல சௌபாக்கியத்துடன் இருக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பிறப்பின் போது, பௌர்ணமி, அமாவாசை, தமிழ் மாத முதல் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் திருவிளக்கு பூஜை செய்வது மிகவும் சிறப்பு. திருவிளக்கை மகாலட்சுமி தேவியாக அன்னையாக நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். திருவிளக்கு பூஜை செய்வதற்கு முன் சுத்தமாக பூஜை அறை மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்து விட வேண்டும். திருவிளக்கை சுத்தப்படுத்திய பிறகு சந்தனம் குங்குமம் இடவேண்டும்.

திருவிளக்கில் எட்டு பாகத்தில் பொட்டிட வேண்டும். அவை உச்சி முகங்கள், ஐந்து தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை ஆகும். இந்த எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்யா லட்சுமி, கஜலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.

இந்த விளக்குக்கு எட்டு போட்டுகள் வைப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்கள் சூரியன் சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள் ஆத்மா மற்றும் உயிராகிய தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிப்பதாக வேதங்கள் கூறுகிறது. திருவிளக்கு பூஜை செய்யும் முன்பு கிழக்கு நோக்கி விளக்கை வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.

திருவிளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும். விளக்குகளை சுத்தமான தாம்பூலம் அல்லது பலகையில் வைக்க வேண்டும். அசையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ள வேண்டும். திரிகள் புதியதாகவும் கெட்டியதானதாகவும் இருக்க வேண்டும். திருவிளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல் துணை விளக்கு ஏற்றி அதன் மூலமே ஏற்ற வேண்டும்.

ந்த திருவிளக்கு பூஜையை சுமங்கலிகள் கன்னிப்பெண்கள் சேர்ந்து வழிபாடு செய்யலாம். திருவிளக்கு அகவல் மற்றும் போற்றிகளை அன்றைய தினம் பாடி வணங்க வேண்டும். பூஜை முடியும் வரை ஸ்லோகங்களை ஒரே மாதிரியான குரலில் சொல்ல வேண்டும் ஒருவர் உயர்த்தியும் ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது. குடும்பம் விருத்தி அடைய வேண்டும் கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் சகல சௌபாக்கியம் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டி திருவிளக்கு பூஜை செய்யும்போது நம் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றம் உண்டாகும்.

admin

Recent Posts

விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி..! இவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது.. புதிய கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு…!!

கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…

3 minutes ago

BREAKING: ஆசிரியர் தேர்வில் முறைகேடு..? அமலாக்கத்துறை அதிரடி சோதனை… காலையிலேயே பரபரப்பு..!!

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…

10 minutes ago

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

20 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

33 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

38 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

43 minutes ago