உங்கள் பான், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா?…. நீங்களே செக் பண்ண இதோ எளிய வழி…!

Spread the love

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31 இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நிதி தரவுகளை முறைப்படுத்தும் வகையில் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதை வருமானவரித்துறை கட்டாயமாகியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இன்று போல் ஆயிரம் ரூபாய் தாமத கட்டணம் செலுத்தி தங்களுடைய பான் கார்டு ஆதார் உடன் இணைக்க வேண்டும். இதுதான் கடைசி வாய்ப்பு என்றும் இணைக்க தவறினால் பான் கார்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைக்க தவறினால் வருமான வரி செலுத்துதல் மற்றும் பணப்பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது என்றும் அதிகப்படியான TDS, TCS பிடித்தம், 15G படிவங்கள் நிராகரிப்பு மற்றும் வங்கி சேவை நிறுத்தம் ஆகியவற்றை சந்திக்க நேரிடும். அதே சமயம் உங்களுடைய பான் கார்டு எண்ணை எப்போது வேண்டுமானாலும் உடனடியாக மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும். அதாவது காலதாமதம் கட்டணம் செலுத்தி ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும்.

இதனிடையே உங்களுடைய பான் கார்டு ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்களே எளிதில் அறிந்து கொள்ளலாம்.

பான் கார்டு உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க முதலில் வருமான வரித் துறையின் இணையதளமான incometax.gov.in-க்கு செல்ல வேண்டும்.

இப்போது ‘லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ததும், ஒரு புதிய டிஸ்பிளே திறக்கும்.

அதில் நீங்கள் ‘வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் ‘ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் திரையில் ஒரு செய்தி தோன்றும், இணைக்கப்படவில்லை என்றால் நீங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் விவரங்களைப் பூர்த்தி செய்து இணைக்கலாம்.

Nanthini

Recent Posts

“தனிமையில் இருக்கலாம் வா.. போனில் அழைத்த காதலி”… ஹோட்டலுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…

2 minutes ago

அரசியல்வாதிகளின் அறைகளுக்குள் நுழையாமல்… பெண்களால் அரசியலுக்கு வர முடியாது… பப்பு யாதவின் சர்ச்சை கருத்தால் பற்றி எரியும் அரசியல்..!!

பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…

4 minutes ago

“ஈரானை விடமாட்டோம்!”: கடல்புறமாக வளைத்துப்பிடித்த அமெரிக்கா… உயிர்ச் சேதங்கள் மோசமாக இருக்கும்”… வல்லுநர்கள் எச்சரிக்கும் 2026-ன் மிகப்பெரிய வளைகுடா போர்?…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…

6 minutes ago

“தப்பிக்க 3 செகண்ட் தான் இருந்தது” என் கண் முன்னே சாம்பலாகி போயிட்டாங்க… திருச்சூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிர் பிழைத்தவர் பகீர் வாக்குமூலம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…

7 minutes ago

ஈரானின் ‘மரணப் பொறி’..? கடல் கண்ணிவெடிகளுக்கு நடுவே சிக்கிய கப்பல்கள் – மீட்க களமிறங்கும் IMO… உலகத்தையே உலுக்கும் கப்பல் போக்குவரத்து நெருக்கடி…!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…

10 minutes ago

அலெர்ட்..! கோடை வெயிலில் தவறியும் “பாராசிட்டமால்” மாத்திரை போடாதீங்க… பொதுச் சுகாதாரத்துறை அதிரடி எச்சரிக்கை.!!

கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…

12 minutes ago