Connect with us

CINEMA

‘லியோ’ திரைப்படம் எப்படி இருக்கு…? நடிகர் உதயநிதி போட்ட ட்வீட்…! அனல் பறக்கும் இணையதளம்…!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்பொழுது தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், படு மாஸாக உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இத்திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதியின் வெறித்தனமான நடிப்பில் உருவாகியுள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

   

ஆடியோ லான்ச் நடக்கவில்லையே என அப்செட் ஆன ரசிகர்களுக்கு லியோ ட்ரைலர்  மிகப்பெரிய விருந்து வைத்தது. ஒரு மணி நேரத்தில் சுமார் ஒரு கோடி பார்வையாளர்கள் இந்த படத்தின் டிரைலரை பார்த்தனர். பல மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனையும் படைத்தது.விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது.

இரண்டாவது சிங்கிளான ‘Badass’ பாடல் கடந்த 28ம் தேதி வெளியாகி ஹிட்டடித்தது.‘லியோ’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை கூட்டி வரும் இத்திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

லியோ பட வெளியீடுக்கு இன்று ஒருநாள் மட்டுமே உள்ளது. எனவே திரைத்துறையை சார்ந்த முக்கியப்புள்ளிகளுக்கு நேற்று சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. இந்நிலையில், நேற்று சிறப்புக்காட்சி பார்த்த நடிகர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திரைப்பட குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு, #LCU என பதிவிட்டுள்ளார். இதனை தளபதி ரசிகர்கள் தற்பொழுது கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

Continue Reading

More in CINEMA

To Top