12 வருடத்துக்கு முன்பு.. வெறும் செருப்பு மற்றும் 1000 ரூபாய் ஆனா இப்போ.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த வைரல் புகைப்படங்கள்..!

By Mahalakshmi on ஜூன் 1, 2024

Spread the love

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் தனது குழந்தைகளுடன் டிஸ்னி லேண்டுக்கு சென்று நிலையில் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வளம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

   

போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமான இவர் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கின்றார். அதைத்தொடர்ந்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்தனர்.

   

நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மகாபலிபுரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. பின்னர் வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். மேலும் தங்களது மகன்களுக்கு உலக் மற்றும் உயிர் என வித்தியாசமாக பெயரிட்டு இருந்தார்கள்.

 

சமூக வலைதள பக்கங்களில் தலை காட்டாமல் இருந்து வந்த நயன்தாரா திருமணத்திற்கு பிறகு தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அதிக அளவில் பகிர்ந்து வருகிறார். தற்போது ஹாங்காங் சுற்றுலா சென்றுள்ள அவர்கள் டிஸ்னிலேண்ட் ரிஷாட் முன்பு குழந்தைகளை ஏந்தியபடி நிற்கும் புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.

அதில் அவர் கூறியதாவது “12 வருடத்திற்கு முன்பு இதே இடத்தில் வெறும் செருப்பு கையில் ஆயிரம் ரூபாய் பணத்தோடு போடா போடி படத்தின் ஒரு பாடலுக்கு அனுமதி கேட்பதற்காக வந்தேன். தற்போது எனது அன்பு குடும்பத்துடன் இந்த இடத்தில் நிற்பது நிறைவாக உணர்ச்சிகரமாக இருக்கின்றது என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ஜவான் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தமிழில் வெளியான அன்னபூரணி படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து ஹீரோயினியாக நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா.