Connect with us

கல்லாகட்டியதா சூரியின் ‘கருடன்’ படம்… வெளிவந்த முதல் நாள் வசூல் ரிப்போர்ட்..

CINEMA

கல்லாகட்டியதா சூரியின் ‘கருடன்’ படம்… வெளிவந்த முதல் நாள் வசூல் ரிப்போர்ட்..

நடிகர் சூரி, சசிகுமார் நடிப்பில் நேற்று வெளியான கருடன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் முதல் நாள் கலெக்சன் அரண்மனை 4 திரைப்படத்தை விடக்குறைவு தான் என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது. தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சூரி.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை என்ற திரைப்படத்தில் நடித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்துக் கொண்ட சூரி தொடர்ந்து இரண்டாவதாக ஹீரோவாக நடித்திருந்த திரைப்படம் தான் கருடன். இந்த திரைப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான துரை செந்தில் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் கருடன்.

   

இந்த திரைப்படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், பிரகிடா, ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது .இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். நேற்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த மாதம் சுந்தர் சி யின் அரண்மனை நான்கு திரைப்படம் வெளியானது.

 

தொடக்கத்தில் சுமாராக ஆரம்பிக்கப்பட்ட இப்படம் அதன்பிறகு நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து கோடை விடுமுறை என்பதாலும் அடுத்தடுத்த காட்சிகளில் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இந்த வருடத்தின் முதல் பிளாக் மாஸ்டர் படம் என்ற பெருமையை பெற்றிருந்தது அரண்மனை 4 திரைப்படம். இதைத்தொடர்ந்து சூரியன் கருடன் படத்தை அனைவரும் ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள்.

நேற்று வெளியான இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றது. சூரியன் நடிப்பு அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் 3 கோடியாக உள்ளது. ஆனால் அரண்மனை 4 படத்தின் முதல் நாள் வசூல் 4.75 கோடி ஆகும்.

இதை வைத்து பார்க்கும் போது கருடனின் வசூல் சற்று குறைவுதான். ஆனால் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. நேற்று காலை காட்சிக்கு திரையரங்குகளில் 20% கூட்டம் நிறைந்திருந்தது. மதியம் காட்சிகளில் 30% மற்றும் இரவு காட்சிகளில் 40 சதவீதமாக இருந்தது. ரசிகர்களின் வரவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வரும் நிலையில் வரும் நாட்களில் கருடன் நல்ல வரவேற்பை பெறும் என்றும் வசூல் வேட்டை நடத்தும் என்றும் பலரும் கூறி வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top