சொந்த வீடு இல்லாத மக்களுக்கு அரசு வீட்டு வசதியை வழங்கி வருகிறது. அனைவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதே மிகப்பெரிய கனவாக இருக்கும். ஏழை மக்களுக்கு வீடு கட்ட உதவுவதற்காக மத்திய அரசு ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இதில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில் வீடு கட்டுவதற்கு அரசு தரப்பில் இருந்து மானிய உதவி வழங்கப்படுகின்றது. இந்த திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் அடுத்து ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் வீடு வாங்க உதவி வழங்கப்படுகிறது. சொந்த நிலத்தில் வீடு கட்ட அரசாங்கம் 2.5 லட்சம் வழங்கும்.
நிலம் இல்லாதவர்களுக்கு அரசாங்க உதவியுடன் கட்டுமான நிறுவனங்களால் கட்டப்படும் மலிவு விலை வீடுகள் கிடைக்கும். வீட்டு கடன்களுக்கு 2.67 லட்சம் வரை வட்டி மானியம் பெறலாம். நகர்ப்புறங்களில் வசிக்கும் EWS, LIG, MIG குழுக்களை சேர்ந்த குடும்பங்கள் நிரந்தர வீடு இல்லாமல் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம். நகர்ப்புற திட்டத்தின் ஒரு பகுதியை மட்டும் நீங்கள் பயன்படுத்தலாம். கடந்த 20 ஆண்டுகளில் ஏதாவது வீட்டு வசதி திட்டத்திலிருந்து உதவி பெற்றிருந்தால் இதில் விண்ணப்பிக்க முடியாது. நகர்ப்புறம் அல்லது கிராமப்புறம் இரண்டில் ஒன்றுக்கு மட்டுமே வீடு கட்ட விண்ணப்பிக்க முடியும்.
விதவைகள், தனியாக வசிக்கும் பெண்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், எஸ்சி எஸ்டி மற்றும் சிறுபான்மையினர், பிரம்மா ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெரு வியாபாரிகள், பிஎம் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பயன்பெறும் கைவினை கலைஞர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சேரிகளில் வசிக்கும் அல்லது கட்டுமானத்தில் பணியாற்று மக்கள் இந்த திட்டத்தில் வீட்டு வசதி பெற விண்ணப்பிக்க முடியும். இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வை இணையதள பக்கத்திற்குச் சென்று நீங்கள் தகுதியான ஆவணங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்கள், வருமானச் சான்றிதழ் மற்றும் நில ஆவணங்கள் அவசியமாகும்.
திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…
கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…
தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…
நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…
கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும்…