ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை அனுஷ்கா. அது மட்டுமல்லாமல் இளசுகளின் கனவு கன்னியாக இருந்த இவரை தற்போது திரைப்படங்களில் பார்ப்பது என்பது அரிதான ஒன்றாகி விட்டது. இவர் பாகுபலி திரைப்படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வந்த அனுஷ்கா அருந்ததி, பாகுபலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கட்டி போட்டார். இவருக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
ஒரு கட்டத்தில் தமிழில் பட வாய்ப்புகள் குறைய தெலுங்கு சினிமா பக்கம் சென்ற அனுஷ்கா சில காலம் அங்கு பயணித்தார். இதன் பிறகு இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அப்படியே குறைந்துவிட்டது. தற்போது உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி உள்ளதால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக தனது உடல் எடையை கூட்டிய அனுஷ்காவால் அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியவில்லை. கடந்த சில வருடங்களாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருந்து வரும் நிலையில் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், நான் 6ஆம் வகுப்பு படிக்கும்போது, என் வகுப்பில் இருந்து ஒரு பையன் என்னிடம் வந்து காதலிப்பதாக சொன்னான். காதல் என்னவென்றே புரியாத வயது அது. நானும் சரி என்று ஏற்றுக்கொண்டேன். என் வாழ்க்கையில் ஒரு இனிமையான நினைவாகவே இன்றும் உள்ளது ” என்று கூறியுள்ளார்.
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…