தமிழ்நாடு அரசு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் கடன் தொகுப்பு திட்டங்களை வைத்துள்ளது. அதன்படி பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த தனிநபர்கள் தற்போது Tabcedco மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக செயல்படும் தமிழக அரசின் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் கீழ் 25 லட்சம் தனி நபர் தொழில் கடன் பெற ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அவசியமாகும்.
விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 18 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர் ஆக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடன் உதவி கிடைக்கும். சிறு வர்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக 25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகின்றது. இதற்கு விண்ணப்பிக்க ஜாதி சான்றிதழ் மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அவசியமாகும். மேலும் இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை அறிவதற்கு http://www.tabcedco.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, திமுக-வை நோக்கி இதுபோன்று ஆயிரக்கணக்கான…
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ராணுவத்தில் இணையும் போதே வீரர்கள் ரகசியங்களை காக்க கடுமையான உறுதிமொழி ஏற்கின்றனர். இந்த…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியை கத்தியால் குத்திவிட்டு, காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்…
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுகவைச் சேர்ந்த…
நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனான தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக எழுந்து வரும் வதந்திகளுக்கும்…
தமிழகத்தில் காலியாகவுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் முறைப்படி அறிவிக்கப்படாத நிலையிலும், அதற்குள்ளாகவே அரசியல் களம் சூடுபிடிக்கத்…