தொகுப்பாளினி தியா மேனன் வீட்டில் விசேஷம்…. வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்…

By Begam

Published on:

சன் குழுமத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றுபவர் தியா மேனன். தியா மேனன் கார்த்திக் சுப்பிரமணியன் என்பவரை ஜூன் 2016 திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்திற்கு முன்பு மூன்று வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

   

இவர் கிரேசி கண்மணி, சுட சுட சென்னை, கால் மேல காசு, சூப்பர் சேலஞ்ச் மற்றும் புது படம் எப்படி இருக்கு என்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர். அதே நேரத்தில் மலையாளத்திலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தியா கார்த்திக் தம்பதியினருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது இந்த குழந்தையின் ‘நூலுகேட்டு’ சடங்கு விழா அவரது வீட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சடங்கு நிகழ்ச்சியினை தியா அவருடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Diya Vj (@diya_menon_official)

author avatar