கோலாகலமாக நடந்த ஆர்கே சுரேஷ் மனைவி வளைகாப்பு விழா…. வைரலாகும் புகைப்படங்கள்

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் ஆர். கே. சுரேஷ். இவருக்கு தயாரிப்பாளர் மது உடன் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணமானது. இதை அடுத்து ஆர்கே சுரேஷ் மது தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் பெயர் இஷார்யா சுரேஷ்.

   

இந்நிலையில் தற்பொழுது மது இரண்டாவது முறை கர்ப்பம் அடைந்துள்ளார். அவருக்கு  வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

சிறப்பாக நடந்து முடிந்த இந்த வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளன. இதோ அந்த புகைப்படங்கள்……