இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் 2018ல் நடிகர் விஷ்ணு விஷால், அமலா பால், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் ‘ ராட்சசன்’ படத்தில் சின்ன பெண் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை ரவீனா தாஹா. இப்படத்திற்கு பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சின்னத்திரையில் கால் பதித்தார்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘தங்கம்’ சீரியலில் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ சீரியலிலும் நடித்தார். நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மௌனராகம் 2’ சீரியலில் சக்தியாக களமிறங்கினார்.
இதன்மூலம் தான் நடிகை ரவீனா மக்கள் மத்தியில் மிகப்பிரபலமானார். இதைத்தொடர்ந்து அவர் விஜய் டிவியின் ‘ குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கினார். மேலும் அவர் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.
பிக் பாஸிற்கு பிறகு தற்பொழுது அவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்பொழுது இவர் Half Bottle என்ற ஆல்பம் சாங் ஒன்றில் நடித்துள்ளார். இந்த ஆல்பம் பாடலின் பிரஸ் மீட்டிங்கில் பேசிய அவர், ‘தளபதி கூட முடியலைனாலும் அவர் பையன் கூடயாவது நடிக்கணும்’ என்று கியூட்டாக பேசிய வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…