குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாலியல் வன்கொடுமை முயற்சிக்குப் பின்னர் குற்றவாளியாய் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பி சொருக்கப்பட்டதால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. டெல்லி நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் இந்த சம்பவத்தில் சிறுமி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ராம் சிங் தேஜ் என்ற நபர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் நான்காம் தேதி காலை ஜஸ்டின் பகுதியில் உள்ள அட்கோட்டில் ராம் சிங் இந்த தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு குற்றவாளியை கண்டுபிடிக்க 10 தனி படைகள் அமைக்கப்பட்ட நிலையில் சிறுமி புகைப்படத்தின் மூலம் அடையாளம் காட்டியதை தொடர்ந்து ராம்சிங் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
