குஜராத்தை சேர்ந்த 36 வயது மேக்ராஜ் பாய் தேஷ்முக் என்பவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வெளிநாட்டு நபர்களுக்கு இது அசாதாரணமாக தோன்றினாலும் மேக்ராஜின் பழங்குடி சமூகத்திற்குள் இத்தகைய ஏற்பாடுகள் கலாச்சார ரீதியாக ஏற்கப்பட்டவை ஆகும். மேக்ராஜ் பாய் தனது 2010 ஆம் ஆண்டு காஜல் காவிட் என்பவருடனும், 2013 ஆம் ஆண்டு ரேகா பென் கெயின் என்பவருடனும் உறவை தொடங்கியுள்ளார். இருவரையும் நிராகரிக்க முடியாமல் அவர் இருவருடனும் சேர்ந்து வாழ லிவ்வின் உறவை தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்த முடிவை பழங்குடி சமூகம் அங்கீகரித்தது. அந்த கிராமத்தின் வழக்கப்படி தம்பதிகள் நிதி ரீதியாக நிலைபெறும் வரை முறைப்படி திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு கணவன் மனைவியாக வாழ அனுமதிக்கப்படுகின்றனர். மேக்ராஜ் பாய் மற்றும் அவருடைய மனைவிகள் இந்த வழியை பின்பற்றி காஜருடன் இரண்டு குழந்தைகளையும் ரேகாவுடன் ஒரு குழந்தையையும் வளர்த்த பிறகு தற்போது பாரம்பரிய சடங்குகளுடன் திருமணம் செய்து கொண்டனர். இது அந்த கிராமத்தில் அன்பு, பொறுப்பு மற்றும் பாரம்பரியத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றது.
