விடிந்ததும் ஷாக்… ரத்த வெள்ளத்தில் சிதறி கிடந்த உடல்கள்… கோவையில் பெரும் பரபரப்பு…!

By Nanthini on ஐப்பசி 13, 2025

Spread the love

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட ஜிடி நாயுடு மேம்பாலத்தின் கீழே கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் அடங்குவர். விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல நொறுங்கியுள்ளது.

உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் காலையில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.