தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகர் தான் ஜெய கிருஷ்ணன். கஸ்தூரி, நம்ம குடும்பம் மற்றும் அபிராமி போன்ற தமிழ் சீரியல்களில் நடித்த பிரபலமானவர். இவர் மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் தன்னுடைய நண்பர்களுடன் கால் டாக்ஸியில் பயணித்த போது ஓட்டுநர் அகமது என்பவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு அவரை தீவிரவாதி என்றும் திட்டியுள்ளார். இது குறித்த புகாரில் ஜெயகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
